25
என் தேவனாகிய கர்த்தாவே
என் தேவனாகிய கர்த்தாவே
உம்மையென்றென்றைக்கும் துதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
கர்த்தாவே என் சத்துருக்கள் என்னை
மேற்கொண்டு மகிழ விடாதிரும் (2)
நீர் என்னைக் கை தூக்கி எடுத்தபடியால்
நாண் உம்மையென்றென்றும் போற்றுவேண் (2)
(என் தேவனாகிய கர்த்தாவே...)
உம்மை நான் நோக்கி கூப்பிட
நீர் என்னைக் குணமாக்கினீர் (2)
பாதாளத்திலிருந்து என்னை ஏறப்பண்ணி
என்னை உயிருடன் காத்தார் (2)
(என் தேவனாகிய கர்த்தாவே...)
கர்த்தாவே உம்மைக் கூப்பிட்டேன்
கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன் (2)
என் புலம்பலை நீர் களிப்பாக மாற்றி
களிப்பின் கட்டினால் கட்டினார் (2)
(என் தேவனாகிய கர்த்தாவே...)