250
எனக்காவே யாவையும்
எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர் நன்றி நன்றி ஐயா என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே நன்றி நன்றி ஐயா நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே (2) (எனக்காகவே யாவையும்...) நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவைக் கொடுக்கின்றேன் பரம பிதா அதைப் பார்க்கிலும் கொடுத்திடுவாரே (2) நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே (2) (எனக்காகவே யாவையும்...) அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே (2) நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே (2) (எனக்காகவே யாவையும்...) ஆபிரகாமை அழைத்தீரே ஆசீர்வாதம் கொடுத்தீரே அதுபோல என்னையும் ஆசீர்வதியும் (2) நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே (2) (எனக்காகவே யாவையும்...)