251
குருசினில் தொங்கினார்
குருசினில் தொங்கினார் எந்தன் தேவன் இயேசுவே
திருரத்தம் சிந்தினார் என் ஜீவன் மீட்கவே (1)
(குருசினில்...)
ஐந்து காயங்கள் குணமாக்கும் தழும்புகள் (1)
மூன்று ஆணிகள் திரியேக முத்திரைகள்
(குருசினில்...)
ஏழு வார்த்தைகள் அவை ஜீவ வசனங்கள் (1)
உலக பாவங்கள் அவர் சுமந்த பாரங்கள்
(குருசினில்...)
மரித்த கிறிஸ்துதான் மா உயிர்த்த தேவன்தான் (1)
உலவும் நேசம்தான் குறை தீர்க்கும் வேதம்தான்
(குருசினில்...)