252
அன்பான இயேசுவுக்கு
அன்பான இயேசுவுக்கு நன்றி நன்றி
ஆறுதல் தருபவரே நன்றி நன்றி (2)
அடைக்கலமானவரே நன்றி நன்றி
ஆண்டவரே உமக்கு நன்றி நன்றி (2)
(அன்பான...)
ஆவியாய் இருப்பவரே நன்றி நன்றி
ஆனல்மூட்டி விட்டவரே நன்றி நன்றி (2)
பாவியைத் தேடி வந்தீர் நன்றி நன்றி
பரலோக வாழ்வு தந்தீர் நன்றி நன்றி (2)
(அன்பான...)
நோய்களைத் தீர்த்தவரே நன்றி நன்றி
பேய்களை ஓட்டினீரே நன்றி நன்றி (2)
காயங்கள் கட்டினீரே நன்றி நன்றி
கரிசனை உள்ளவரே நன்றி நன்றி (2)
(அன்பான...)
கண்ணீரைக் கண்டவரே நன்றி நன்றி
கருணை உள்ளமே நன்றி நன்றி (2)
மண்ணான எனை நினைத்தீர் நன்றி நன்றி
மன்னித்து வாழ்வு தந்தீர் நன்றி நன்றி (2)
(அன்பான...)