254
நிர்மூலமாகாதிருப்பது உந்தன்
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் - நான் (2) கிருபை கிருபை மாறாத கிருபை (1) கிருபையினாலே இரட்சித்தீரே நீதிமானாக மாற்றினீரே (2) உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட உன்னதங்களிலே அமரச் செய்தீர் (2) கிருபை கிருபை மாறாத கிருபை (1) (நிர்மூலமாகாதிருப்பது...) கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக சொந்த பிள்ளையாய் முன்குறித்தீரே (2) பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே பாவம் அனைத்தையும் மன்னித்தீரே (2) கிருபை கிருபை மாறாத கிருபை (1) (நிர்மூலமாகாதிருப்பது...) தேவனின் பலத்த சத்துவத்தாலே நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் (2) கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் (2) கிருபை கிருபை மாறாத கிருபை (1) (நிர்மூலமாகாதிருப்பது...)