Home
257

நீரே வழி நீரே சத்தியம்

          நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
வேறு ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன் (2)
விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமமய்யா
உமக்கு நிகர் என்றும் நீர் தானய்யா (2)

(நீரே வழி நீரே...)

கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லால் ஓர் சிற்பம் அல்ல
ஜீவனுள்ள தேவன் என்றால் நீர்தானய்யா (2)
ரூபங்கள் உமக்கில்லை சொரூபமும் உமக்கில்லை
ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே (2)

(நீரே வழி நீரே...)

உண்டானது எல்லாமே உம்மாலே உண்டானது
உம் நாமம் மகிமைக்கே உண்டாக்கினீர் (2)
படைப்பு தெய்வம் அல்ல பார்ப்பதெல்லாம் தெய்வம் அல்ல
கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா (2)

(நீரே வழி நீரே...)

எல்லாம் வல்ல தெய்வம் நீரே
எல்லையில்லாதவரே உம்மாலே ஆகாதது ஒன்றும் இல்லையே (2)
வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி (2)

(நீரே வழி நீரே...)
        

Listen to the Song

Song 257
0:00 / 0:00
Speed:

Share this Song