Home
28

தொல்லை கஷ்டங்கள்

          நேர்ந்திடும் தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற் கேட்கும் செவியிலே
பரத்தில் இருந்து ஜெயம் வரும்
பரன் என்னைக் காக்க வல்லோன்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
உண்டெனக்கு உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே (1)

ஐயம் இருந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால் தான்
மீட்பர் உதிர பெலத்தினால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்று
இயேசு கை தூக்கினார்
முற்றும் என் உள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்க வல்லோன்

(காக்கும் வல்ல...)

என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேசர் மீட்பரை
யார் கை விட்டாலும்
பின் செல்வேன்
எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவு அன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
அவர் என்னைக் கைவிடமாட்டார்

(காக்கும் வல்ல...)
        

Listen to the Song

Song 28
0:00 / 0:00
Speed:

Share this Song