Home
3

தாசரே இத் தரணியை

          தாசரே இத் தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் (2)
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம் மாவிருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்

(தாசரே இத் தரணியை...)

வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தி அன்பாய் அழைத்திடுவோம் (2)
உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே

(தாசரே இத் தரணியை...)

பசி உற்ரோர்க்கு பிணியாளிகட்கு
பட்சமாக உதவி செய்வோம் (2)
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே

(தாசரே இத் தரணியை...)

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நேசரை நாம் உயர்த்திடுவோம் (2)
பொறுக்கவெண்ணா கஸ்டத்துக்குள்
நிஸ்டுரத்துக்குள் படுகுளிக்குள் விழுந்தனரே

(தாசரே இத் தரணியை...)

மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் (2)
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

(தாசரே இத் தரணியை...)
        

Listen to the Song

Song 3
0:00 / 0:00
Speed:

Share this Song