Home
31

துதி துதி என் மனமே

          துதி துதி என் மனமே
துதிகளின் உன்னதனை (2)
தூத கணங்கள் வாழ்த்திப் புகழ்ந்திடும்
வானவர் இயேசுவின் நாமமதை (2)

(துதி துதி என் மனமே...)

பாவமாம் காரிருள் சூழ்ந்திடும் வேளை
இரட்சிக்க தீபமாய் வந்தார் (2)
அற்புதமாய் நம்மை நடத்திடும் இயேசு
அன்பரின் காயங்கள் கண்டே (2)

(துதி துதி என் மனமே...)

கல்வாரியில் அன்று சிந்தின ரத்தம்
கழுவிடும் பாவங்களை (2)
கண்ணீரைத் துடைக்கும் அவரது அன்பு
கல்மனம் கரைத்திடுமே (2)

(துதி துதி என் மனமே...)

சீக்கிரமாய் இதோ வருகிறேன் என்றவர்
சீக்கிரம் வந்திடுவார் (2)
உன்னத தேவனின் மகிமையைக் காண
உள்ளமும் ஏங்கிடுதே (2)

(துதி துதி என் மனமே...)
        

Listen to the Song

Song 31
0:00 / 0:00
Speed:

Share this Song