32
ஆராதிப்பேன் நான் ஆனந்த
ஆராதிப்பேன் நான் ஆனந்தங்கொண்டேன் இயேசுவே என் வாழ்வில் எல்லாம் ஆனாரே ஆராதிப்பேன் நான் துதி பாடுவேன் இயேசுவே என் வாழ்வில் எல்லா நாளுமே (ஆராதிப்பேன் நான்...) என் இருதயம் இருள் சுழ்ந்ததே எனக்கோர் ஒத்தாசை தேடியலைந்தேன் (2) கிருபா பலியாய் இயேசுவைக் கண்டேன் (1) காலமெல்லாம் நான் கீதம் பாடுவேன் (1) (ஆராதிப்பேன் நான்...) அன்பின் நிழலிலே என்னை அணைத்தார் அவரின் சந்நிதி ஆனந்தமே (2) அருளின் ஒளியில் பரவசமானேன் (1) ஆயுளெல்லாம் கர்த்தர் துதி பாடுவேன் (1) (ஆராதிப்பேன் நான்...) சிந்தினார் உதிரம் சிந்தை மாற்றினார் உள்ளத்தில் இல்லத்தில் ஆறுதல் கண்டேன் (2) அந்திய நாளில் இயேசுவோடு வாழ்வேன் (1) அனுதினம் பாடுவேன் சங்கீதமே (1) (ஆராதிப்பேன் நான்...)