35
என் தேவன் என் பெலனே
என் தேவன் என் பெலனே அவர் கூறும் நல் வசனம் என் பாதையின் வெளிச்சம் அவர் நாமம் என் நினைவே (என் தேவன் என் பெலனே...) தீங்கு நாளில் என்னை அவர் தம் கூடாரம் மறைவில் காத்திடுவார் (2) தகுந்த வேளை தம் கரத்தால் கன்மலை மேலாய் உயர்த்திடுவார் (2) (என் தேவன் என் பெலனே...) கர்த்தருக்காய் காத்திடுவாய் அவரால் இதயம் ஸ்திரப்படுமே (2) திட மனதோடு காத்திருந்து அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே (2) (என் தேவன் என் பெலனே...) கர்த்தர் எனக்கு பெலனானவர் யாருக்கு இனி நான் பயப்படுவேன் (2) ஓவனுள்ள நாட்களெல்லாம் ஆலயத்தில் நான் தங்கிடுவேன் (2) (என் தேவன் என் பெலனே...)