37
திருக்கரத்தால் தாங்கி என்னை
திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினம் நீர் வனைந்திடுமே (2) (திருக்கரத்தால் தாங்கி...) உம் வசனம் தியானிக்கையில் இதயம் அதில் ஆறுதலே காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி நடத்தும் (2) (திருக்கரத்தால் தாங்கி...) ஆழ்கடலில் அலைகளினால் அசையும் போது என் படகில் ஆத்ம நண்பன் இயேசு உண்டு சேர்ந்திடுவேன் சேமமாக (2) (திருக்கரத்தால் தாங்கி...) அவர் நமக்காய் ஜீவன் தந்து அளித்தனரே பெரிய மீட்பு கண்களினால் காண்கிறேனே இன்ப கானான் தேசமதை (2) (திருக்கரத்தால் தாங்கி...)