39
ஆனந்த துதி ஒலி
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஐனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ... (2)
மகிமைப் படுத்துவேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கறையில்லா தேவனின் வாக்கு - ஆ... (2)
(ஆனந்த துதி ஒலி...)
விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகர் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகளறுந்திடும்
விடுதலைப் பெருவிழா காண்போம் -ஆ… (2)
(அனந்த துதி ஒலி...)
பார் போற்றும் தேவன் நம் தேவன்
பாரினில் வேறில்லை பாக்யம்
நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே
வேறென்ன வாழ்வினில் வேண்டும்
பிள்ளைகளும் சபையும் பிதா முன்னே நிலைக்கும்
பரிசுத்தர் மாளிகை எழும்பும் -ஆ... (2)
(ஆனந்த துதி ஒலி...)