4
ஓசன்னா பாடுவோம்
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே உன்னதத்தில் தாவீது மைந்தனுக்கு ஓசன்னா (2) முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார் (2) அன்று போல இன்று நாமும் அன்பாய்த் துதி பாடுவோம் (ஓசன்னா பாடுவோம்...) சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார் (2) இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார் (ஓசன்னா பாடுவோம்...) பாவமதைப் போக்கவும் இப் பாவியைக் கைதூக்கவும் (2) பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார் (ஓசன்னா பாடுவோம்...) பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார் (2) ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம் (ஓசன்னா பாடுவோம்...) குருத்தோலை ஞாயிற்றில் நாம் குரு பாதம் பணிவோம் (2) கூடி அருள் பெற்று நாமும் திரியேகரைப் போற்றுவோம் (ஓசன்னா பாடுவோம்...)