41
முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
ஒரு ரோஜாப் புஸ்பம் போலவே
மா சௌந்தர்ய மானவரே
இயேசு நாதனே எம் தேவனே (2)
வாழ்த்துவோம் எங்கள் தேவனை
ஜீவ நாட்களிலும் மறு யாத்திரையிலும்
நன்றியோடே நாம் பாடிடுவோம் (1)
இதயம் வெம்பி கசந்து நொந்து
மனக்கிலேசம் அடைந்திடுங்கால்
மனப் புண்ணில் எண்ணெய் தடவி
மன ஆறுதல் தந்திடுவார் (2)
(வாழ்த்துவோம் எங்கள்...)
தந்தை தாயும் என் சொந்தமானோரும்
கைவிட்டாலும் அவர் மாறிடார்
துன்பத்தில் எம்மைத் தாங்கிடுவார்
இன்பங்கள் எமக் ஈந்திடுவார் (2)
(வாழ்த்துவோம் எங்கள்...)