Home
43

துதிப்பேன் துதிப்பேன்

          துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
கால காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நாள் உள்ளளவும் துதிப்பேன் (3)
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்...

பாவங்கள் நான் செய்திட்டாலும்
பாவி என் மீது அன்பைச் சொரிந்து (2)
என்னை மீட்டு காத்து நடத்தும்
எந்தன் இயேசுவைத் துதிப்பேன் (2)

(துதிப்பேன் துதிப்பேன்...)

நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும் (2)
என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த
எந்தன் இயேசுவைத் துதிப்பேன் (2)

(துதிப்பேன் துதிப்பேன்...)

வாழ்விலும் உம்மை நான் ஏற்றிடுவேன்
தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே (2)
ஏழை நானே பாதம் பணிந்து
எந்தன் இயேசுவைத் துதிப்பேன் (2)

(துதிப்பேன் துதிப்பேன்...)
        

Listen to the Song

Song 43
0:00 / 0:00
Speed:

Share this Song