44
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய்த் துதித்து போற்றிப் பாடுங்கள் (2) தேவனளித்த நன்மை பெரியது கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதது (2) (ஜாதிகளே எல்லோரும்...) இன்று நாங்கள் கூடி உம்மைப் போற்றிப் பாட ஈந்தளித்தீர் உந்தன் கிருபை (2) இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் என்றுமவர் துதி பாடி மகிழ்வோம் (2) (ஜாதிகளே எல்லோரும்...) ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார் சேதம் இன்றி என்னைக் காத்தாரே (2) ஜீவிய பாதையில் தேவை தந்து ஜெய கீதம் பாட ஐெயம் அளித்தார் (2) (ஜாதிகளே எல்லோரும்...) பாவ சாப சோகம் முற்றும் என்னில் நீக்கி சாவு பயம் யாவும் போக்கினார் (2) சோதனை வேதனை சூழ்கையிலே சோர்ந்திடாமல் தாங்க பெலனளித்தார் (2) (ஜாதிகளே எல்லோரும்...)