45
இயேசுவே வழி சத்தியம்
இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
அவரன்றி மீட்பு இல்லையே
அண்டிக் கொள்ளுவார் அவர் சமூகம்
ஆனந்தமாய் கீதம் பாடவே
ஆ .... அல்லேலூயா போற்றிடுவார்
புன்னகையில் துதித்திடுவோம்
ஓ…எந்தன் இயேசு என்னுடனே
பூரிப்பால் உள்ளம் பொங்குதே
இயேசுவே ஞானம் நீதியும் மீட்பும்
ஆலோசனைக் கர்த்தரவரே
அன்பினை ருசி இன்பமாய்ப் பாடு
ஆத்துமாவில் நேசம் பொங்கவே
(ஆ ..... அல்லேலூயா...)
இயேசுவே கர்த்தர் ராஜாதி ராஜா
என்றென்றுமாய் அரசாளுவார்
ஆளுவோம் என்றும் அவருடனே
ஆயிரமாய் ஆண்டுகளாய்
(ஆ ..... அல்லேலூயா...)
இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
அவரன்றி மீட்பு இல்லையே
அண்டிக் கொள்ளுவார் அவர் சமூகம்
ஆனந்தமாய் கீதம் பாடவே (1)