46
புதுக் கிருபை அளித்திடுமே
புதுக் கிருபை அளித்திடுமே புகலிடம் தந்திடுமே புது ஜீவன் புது பெலமும் எந்தன் இயேசுவே தந்திடுமே (2) பரதேசியாய் நான் அலைந்தேனையா பாசமாய்த் தேடினீரே (2) இதுகாறும் காத்து இனியும் நடத்தும் இயேசு இரட்சகரே (2) (புதுக் கிருபை...) நலமுடன் நாமும் ஆராதிக்க நல்கினீர் உம் கிருபை (2) கண்மணி போல கடைசி வரைக்கும் காத்திட வாக்களிப்பீர் (2) (புதுக் கிருபை...) உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற வல்லமை தந்திடுமே (2) இம் மட்டும் காத்தீர் இனியும் நடத்தும் இயேசு இரட்சகரே (2) (புதுக் கிருபை...)