Home
47

ஊற்றுத் தண்ணீரே எந்தன்

          ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கி வா (2)
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே (1)
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் (1)

(ஊற்றுத் தண்ணீரே...)

கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஐனங்களின் தாகம் தீர்த்தீரே (2)
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் (1)
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே (1)

(ஊற்றுத் தண்ணீரே...)

ஜீவ தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிரப்பிடுமே (2)
கனி தந்திட நான் செழித்தோங்கிட (1)
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட (1)

(ஊற்றுத் தண்ணீரே...)

கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
புது பெலன் அடைந்து நான் மகிழ்ந்திடவே (2)
பரிசுத்தத்தைப் பயத்துடனே (1)
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே (1)

( ஊற்றுத் தண்ணீரே...)
        

Listen to the Song

Song 47
0:00 / 0:00
Speed:

Share this Song