Home
48

என் இயேசு ராஜா சாரோனின்

          என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் (2)
அலைமோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் (2)

(என் இயேசு ராஜா...)

கடலென்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாது எல்லையை என் வாழ்வில் தாரும் (2)

(என் இயேசு ராஜா...)

பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாமல்
பரமனே எம் முன்னே தீபமாய் வாரும் (2)

(என் இயேசு ராஜா...)

எதிர் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடு இருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரைசேர்க்கும் தேவன்
என் ஜீவ படகினில் நங்கூரம் நீரே (2)

(என் இயேசு ராஜா...)
        

Listen to the Song

Song 48
0:00 / 0:00
Speed:

Share this Song