49
ஜோதி தோன்றும் ஓர் தேச
ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு விசுவாசக் கண்ணால் காண்கிறோம் நம் பிதா அழைக்கும் பொழுது நாம் அங்கே வசிக்கச் செல்லுவோம் இன்பராய் ... ஈற்றிலே ... மோட்சக்கரையில் நாம் சந்திப்போம் (4) அந்த வான் கரையில் நின்று நாம் விண்ணோர் கீதங்களைப் பாடுவோம் துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து சுத்தரின் ஆறுதல் அடைவோம் (இன்பராய் ஈற்றிலே...) நம் பிதாவின் அன்பை நினைந்து அவரால் மகிழ்ந்து பூரிப்போம் மீட்பின் நன்மைகளை உணர்ந்து அவரை வணங்கித் துதிப்போம் (இன்பராய் ஈற்றிலே...) ஏழைக்கும் மாளிகை அங்குண்டு என்று நம் மீட்பர் அழைக்கிறார் மாந்தர் யாவருக்கும் இடமுண்டு எல்லோரும் வாருங்கள் என்கிறார் (இன்பராய் ஈற்றிலே...)