50
வாசலண்டை நின்று ஆசையாய்
வாசலண்டை நின்று அசையாய் தட்டும் நேசர் இயேசுவுக்குன் உள்ளம் திறவாயோ பாவியை ஒரு போதும் தள்ளாத நேசர் வாவென்று உன்னை அமழைக்கிறாரே பாவியை ஒரு போதும் தள்ளாத நேசர் வாவென்று உன்னை அழைக்கிறாரே (1) ஆதரிப்பார் யாருமில்லை என்றெண்ணி அதரை மீதினில் அலைந்திடுவாயோ காணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர் கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் காணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர் கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் (1) வழியும் சத்தியமும் ஜீவனுமாம் இயேசு வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லை இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லை இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ (1)