53
பலன் கொடுப்பீர் நல்ல பலன்
பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர் (2) வழியோரமா நான் கற்பாறையா முட்புதரா நான் நல்ல நிலமா (2) (பலன் கொடுப்பீர் நல்ல...) இறைவனின் வார்த்தை விதையாகும் அறியா உள்ளம் வழியோரம் (2) பறவைகள் விரைந்தே தின்பது போல் பகைவனாம் தீயோன் பறித்திடுவான் (2) (பலன் கொடுப்பீர் நல்ல...) மண்ணில்லாப் பாறை நிலமாகும் மனதில் நிலையற்ற மனிதர்களே (2) வேரற்ற வாழ்க்கை வாழ்வதனால் வெய்யிலில் வார்த்தை கருகிவிடும் (2) (பலன் கொடுப்பீர் நல்ல...) முட்செடி புதராம் மனுவுள்ளம் முளைத்திடும் ஆசைகள் நெறித்திடவே (2) இறைவனின் வார்த்தை வளரவில்லை இறுகியே ஆசைகள் கொன்றதினால் (2) (பலன் கொடுப்பீர் நல்ல...) இறைவனின் வார்த்தை உணர்ந்திடுவோர் குறையில்லா பண்பட்ட நிலமாகும் (2) அறுபது முப்பது நூறு என்றே அறுவடை எடுப்பார் தம் வாழ்வில் (2) (பலன் கொடுப்பீர் நல்ல...)