56
யூத ராஜ சிங்கம்
யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார் (யூத ராஜ சிங்கம்...) வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே திறனை மதித்திடவே (யூத ராஜ சிங்கம்...) மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன நொடியில் முறிபட்டன (யூத ராஜ சிங்கம்...) எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே (யூத ராஜ சிங்கம்...) மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார் அக மகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் (யூத ராஜ சிங்கம்...) உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை மரிப்பதில்லை என்றும் மரிப்பதில்லை (யூத ராஜ சிங்கம்...)