58
இயேசுவை நம்பினோர் மாண்ட
இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றுன்னை இரட்சிப்பார்
பங்கம் வராதுன்னை ஆதரிப்பார்
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை தேற்றிடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
என்றென்றும் காத்துன்னை நடத்துவார்
கல்லுகள் முள்ளுகள் பாதையிலே
தொல்லைகள் துக்கங்கள் நெஞ்சத்திலே
எல்லாம் எதிர்த்தாலும் அஞ்சிடாதே
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார்
(நெஞ்சமே நீ அஞ்சிடாதே...)
வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவரே
வாருங்கள் இயேசுவின் பாதத்தண்டை
உங்களின் பாரத்தைத் தான் சுமந்து
நித்திய ஆறுதல் தருவேன் என்றார்
(நெஞ்சமே நீ அஞ்சிடாதே...)