59
மண்ணோரை மீட்க வந்த
மண்ணோரை மீட்க வந்த ராஜாவே விண்ணின்று மீண்டும் வாருமே மண்ணோராம் எம்மை விண்ணோடு சேர்க்க விண்தூதரோடு வாருமே பின்பற்றுவோர்க்கு பிதாவின் ஸீட்டில் பேரின்பத்தோடு வாழ்வதற்கு வாசஸ்தலங்கள் உண்டென்று சொல்லி சென்ற எம் தேவா வாருமே (2) அறியாத நேரம் வருவேனென்றரே அடியார்கள் நெஞ்சில் ஊக்கத்தோடே விசுவாசம் அன்பு நம்பிக்கையோடே விழித்திருக்க அன்பால் அருள் தாருமே (2) நித்திரை செய்யும் தேவ தாசரும் இத்தரை மீது வாழ்வதற்கு கீர்த்தனம் பாடி எதிர்கொண்டு செல்ல கெம்பீரமாக வாருமே (2)