Home
6

சருவ லோகாதிபா நமஸ்காரம்

          சருவ லோகாதிபா நமஸ்காரம்
சருவ சிருஸ்டிகனே நமஸ்காரம்
தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே நமஸ்காரம் (2)

(சருவ லோகாதிபா நமஸ்காரம்...)

திரு அவதாரா நமஸ்காரம்
ஜெகத்திரட்சகனே நமஸ்காரம்
தரணியின் மானிடர் உயிர் அடைந்தோங்க
தருவினில் மாண்டோய் நமஸ்காரம் (2)

(சருவ லோகாதிபா நமஸ்காரம்...)

பரிசுத்த ஆவி நமஸ்காரம்
பரம சற்குருவே நமஸ்காரம்
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரிய சித்தே சதா நமஸ்காரம் (2)

(சருவ லோகாதிபா நமஸ்காரம்...)

முத்தொழிலோனே நமஸ்காரம்
மூன்றில் ஒன்றோனே நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா கருணசமுத்ரா
நித்திய திரியேகா நமஸ்காரம் (2)

(சருவ லோகாதிபா...)
        

Listen to the Song

Song 6
0:00 / 0:00
Speed:

Share this Song