Home
63

தேவனின் ஆலயமே

          தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே

(தேவனின் ஆலயமே...)

இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
அவருக்காய் கிரயமாய்க் கொள்ளப்பட்டோம் (2)
தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோம் நாம்
தேவபிள்ளைகளானோம் அவர் சொந்த ஐனமானோம் (2)

(தேவனின் ஆலயமே...)

நாம் இனி நம்முடையவர்களல்ல
அவரே நம் சரீரத்தின் சொந்தமானவர் (2)
வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்
பரிசுத்தம் காத்துக் கொள்வோம் பரிசுத்த ஜாதியாக (2)

(தேவனின் ஆலயமே...)

கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
அவருடன் ஒரே ஆவியாயிருப்போம் (2)
ஆவியினாலும் சரீரத்தினாலும்
மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும் (2)

(தேவனின் ஆலயமே...)
        

Listen to the Song

Song 63
0:00 / 0:00
Speed:

Share this Song