Home
64

தூயாதி தூயவரே உமது

          தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன் (1)

பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் (2)

(தூயாதி தூயவரே...)

சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே (2)

(பாரில் எனக்கு...)

நோய்களை அகற்றிடும் வைத்தியராய்
தெய்வீக நல் சுகம் ஈந்திடுமே (2)

(பாரில் எனக்கு...)

துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே (2)

(பாரில் எனக்கு...)

பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வருவீரே (2)

(பாரில் எனக்கு...)

பாவத்தின் சேற்றினில் அமிழ்ந்திடாமல்
பாசமாய் அணைத்தென்னைத் தூக்கினீரே (2)

(பாரில் எனக்கு...)
        

Listen to the Song

Song 64
0:00 / 0:00
Speed:

Share this Song