65
அத்தி மரம் துளிர்விடாமற்
அத்தி மரம் துளிர்விடாமற் போனாலும் திராட்சைச் செடி பழம் கொடாமற் போனாலும் ஒலிவ மரம் பலனற்றுப் போனாலும் நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் (1) (அத்தி மரம்...) வயல்களிலே தானியமின்றிப் போனாலும் மந்தையிலே முதலற்றுப் போனாலும் தொளுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் - நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் (1) (அத்தி மரம்...) நதிகளிலே தண்ணீர் வற்றிப் போனாலும் நாவறண்டு நான் மயங்கி வீழ்ந்தாலும் உடலழிந்து உயிர் பிரிந்து போனாலும் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் (1) (அத்தி மரம்...)