67
உயிர்த்தெழுந்தாரே இயேசு
உயிர்த்தெழுந்தாரே இயேசு ஜெயித்தெழுந்தாரே (2) சாவை வென்ற வேந்தனாக ஜெயித்தெழுந்தாரே (2) கல்லறை அங்கே திறந்திடவே காவல் வீரர் பயந்திட (2) கர்த்தரைக் காணாது கலங்கிய வீரர் பயந்து நடுங்கவே ஜெயம் கொண்டார் (2) (உயிர்த்தெழுந்தாரே...) எழுந்தார் கிறிஸ்து ஜெயத்துடனே ஜெயம் கொண்ட கிறிஸ்து அவர் தாமே (2) சாவை வென்ற மகிமையின் கிறிஸ்து உன்னை மீட்கவே எழுந்துவிட்டார் (2) (உயிர்த்தெழுந்தாரே...)