Home
68

என் ஆத்தும நேச மேய்ப்பரே

          என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தில் ஆனந்தமே
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை - இப்போ
காட்டும் செய்ய ஆயத்தம்

மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்
தம் ஆத்மத்தைத் தேற்றுமிடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்

(பேசும் பேசும்...)

பாவிகட்கு உமது அன்பை
என் நடையால் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியால் உள்ளத்தை
போரில் வெல்ல அபிஷேகியும்

(பேசும் பேசும்...)

என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையே செல்வேன்
ஆசித்து ஈகிறேன் என்னெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும்

(பேசும் பேசும்...)
        

Listen to the Song

Song 68
0:00 / 0:00
Speed:

Share this Song