69
குருசினில் தொங்கி குருதியும்
குருசினில் தொங்கி குருதியும் வடிய கொல்கொதா மலை தனிலே - நம் குரு இயேசு ஸ்வாமி கொடுந்துயர் பாவி கொள்ளாய் கண் கொண்டு சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே சிலுவையில் சேர்த்தைய்யோ - தீயர் திருக் கரங் கால்களில் ஆணிகளடித்தார் சேனைத்திரள் சூழ (குருசினில் தொங்கி...) பாதகர் நடுவில் பாவியினேசன் யூத பாதகன் போல் தொங்க - யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிப் படுத்திய கொடுமைதனை (குருசினில் தொங்கி...) சந்திர சூரிய சகல வான் சேனைகள் சகியாமல் நாணுதையோ - தேவ சுந்தர மைந்தன் உயிர் விடும் காட்சியால் துடிக்கா நெஞ்சுண்டோ தீயர் (குருசினில் தொங்கி...) ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த இறைவன் விலாவதிலே தீட்டிய தீட்சைக் குருதியும் ஐலமும் - அவன் திறந் தூற் றோடுது பார் (குருசினில் தொங்கி...) எருசலேம் மாதே பதறி நீ யழுது ஏங்கிப் புலம்பலையோ - நின் எருசலையதிபன் இளமணவாளன் எடுத்த கோலமிதோ (குருசினில் தொங்கி...)