70
ஆத்துமமே என் முழு உள்ளமே
ஆத்துமமே என் முழு உள்ளமே - உன் ஆண்டவரைத் தொழுதேற்று - இந் நாள் வரை அன்பு வைத்தாதரித்த - உன் ஆண்டவரைத் தொழுதேற்று போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள (2) (ஆத்துமமே என்...) தலை முறை தலை முறை தாங்கும் விநோத உலக முன் தோன்றி ஒழியாத (2) (ஆத்துமமே என்...) துதி மிகுந்தேற தோத்திரி தினமே இதயமே உள்ளமே என் மனமே (2) (ஆத்துமமே என்...) தினம் தினம் உலகில் நீ செய்பலவான வினை பொறுத்தருளும் மேலான (2) (ஆத்துமமே என்...) வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த ஓதரும் தயை செய் துயிர் தந்த (2) (ஆத்துமமே என்...)