73
வானாதி வானங்கள்
வானாதி வானங்கள் இல்லையோ பூமியில் மாளிகை இல்லையோ - பின்னே ஏன் தெரிந்தீர் ஏழை என் உள்ளத்தை பாவக்கறை யாவும் ஜீவரத்தம் கொண்டு கழுவி வசிக்கவோ (வானாதி வானங்கள்...) வெள்ளைக் கல்லறை உள்ளே பாவமே (1) எந்தன் மோக எண்ணமும் பாவக்கிரியையும் காணக் கண் கூசுதே எந்தன் இயேசு ராஜனே உந்தன் பாதம் வந்தேனே - எந்தன் பாவக்கறை யாவும் ஜீவ ரத்தம் கொண்டு கழுவி வசிக்கவோ (வானாதி வானங்கள்...) மாயமாலமும் எந்தன் மாய வாழ்க்கையும் (1) எந்தன் அந்தரங்கமும் ஆசா பாசமும் அருவருப்பானதே எந்தன் இயேசு ராஜனே உந்தன் பாதம் வந்தேனே - எந்தன் பாவக்கறை யாவும் ஜீவ ரத்தம் கொண்டு கழுவி வசிக்கவோ (வானாதி வானங்கள்...)