74
என்னை நேசிக்கின்றாயா
என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா (2)
(என்னை நேசிக்கின்றாயா...)
வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் (2)
தேடி இரட்சிக்கப் பிதா என்னை அனுப்பிடவே
ஓடி வந்தேன் மானிடனாய் (2)
(என்னை நேசிக்கின்றாயா...)
பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார் (2)
பரிகாசச் சின்னமாய்ச் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய் (2)
(என்னை நேசிக்கின்றாயா...)
பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கிறேன் பார் (2)
உன் பாவம் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைப்பாற வா (2)
(என்னை நேசிக்கின்றாயா...)
உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான் (2)
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ (2)