Home
75

இயேசு போதுமே இயேசு

          எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னைச் சந்திக்க வந்திடுவாரே

இயேசு போதுமே இயேசு போதுமே
எந்த நாளிலுமே என்னிலையிலுமே
  எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே

பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாம்சமும் மயங்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே

(இயேசு போதுமே...)


மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்

(இயேசு போதுமே...)

புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத் தாக்கில் காத்திடுவார்

(இயேசு போதுமே...)
        

Listen to the Song

Song 75
0:00 / 0:00
Speed:

Share this Song