78
உள்ளம் ஆனந்த கீதத்திலே
உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்கிறதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் (உள்ளம் ஆனந்த...) பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய் நான் அலைந்தேன் அந்த பாரச் சிலுவையிலே எந்தன் பாவத்தைச் சுமந்தவரே (4) (உள்ளம் ஆனந்த...) பல ஆசையின் ஆழியிலே அழிந்தே மனம் சோர்ந்திருந்தேன் அந்த பாசக் கரங்களிலே அணைத்தே என்னைத் தூக்கினாரே (4) (உள்ளம் ஆனந்த...) அந்தகாரத்தின் வாழ்க்கையிலே தடுமாறியே நான் அலைந்தேன் நிறைவானதோர் பேரொளியாய் எந்தன் பாதையில் தோன்றினாரே (4) (உள்ளம் ஆனந்த...)