79
ஆயிரம் ஆண்டுகள்
ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும்
அலைகடல் என்றும் ஓய்வதில்லை
ஆண்டவர் இயேசுவை நம்பியவர்
அநாதையாகி அலைவதில்லை
(ஆயிரம் ஆண்டுகள்...)
மாதம் ஒரு நாள் நிலா மறைந்தால்
வானிலா இல்லை என்பாயோ (2)
சோதனை வேதனை வருகையிலே (1)
நீயும் தேவனே இல்லை எனலாமோ
(ஆயிரம் ஆண்டுகள்...)
ஆண்டவர் கொண்ட திருச்சித்தம்
உன்னில் ஆளுகை செய்ய இணங்கிடுவாய் (2)
காலையில் கதிரவன் பனி போல (1)
உன் கவலைகள் யாவும் மறைந்துவிடும்
(ஆயிரம் ஆண்டுகள்...)