80
உள்ளமெல்லாம் உருகுதையோ
உள்ளமெல்லாம் உருகுதையோ உத்தமனை நினைக்கையிலே உம்மையல்லால் வேறே தெய்வம் உண்மையாய் இல்லையே கள்ளனென்று தள்ளிடாமல் அள்ளி என்னை அணத்தவா சொல்லடங்கா நேசத்தாலே சொந்தமாக்கிக் கொண்டிரே எத்தன் என்னை உத்தமனாக்க சித்தம் கொண்டீர் என் இயேசையா எத்தனையாய் துரோகம் நான் செய்தேன் அத்தனையும் நீர் மன்னித்தீர் இரத்தம் சிந்த வைத்தனே நான் அத்தனையும் என் பாவமல்லோ கர்த்தனே உம் அன்புக்கீடாய் நித்தம் செய்வேன் சேவையே (4)