81
ஆவி அனலுள்ளதாய் அவியாமல்
ஆவி அனலுள்ளதாய்
அவியாமல் பாதுகாப்பாய் (2)
அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
ஜீவிப்பது பரிதாபம் (2)
(ஆவி அனலுள்ளதாய்...)
கர்த்தரின் நாள் சமீபம்
மிகக் கருத்துடன் ஜீவிப்பாயே (2)
நிர்பந்த நாட்கள் வரும்
நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே (2)
(ஆவி அனலுள்ளதாய் ...)
வருகையின் அடையாளங்கள்
வெகு விரைவாக நிறைவேறுதே (2)
வானத்தின் அதிசயங்கள்
காலம் கூறுதே கண்டிடுவாய் (2)
(ஆவி அனலுள்ளதாய்...)