83
உலகோர் உன்னைப் பகைத்
உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூறுவாயா ?
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவையைச் சுமப்பாயா (1)
உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)
எனக்காக நீ என்ன செய்தாய்
உலக மேன்மை அற்பமென்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா
ஊழியம் செய்ய வருவாயா (1)
(உனக்காக நான்...)
மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கின்றாய் பாவப் புல் வெளியில்
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுவாயா (1)
(உனக்காக நான்...)
ஜீவ அப்பம் இயேசுவல்லோ
ஆத்தும பசியைத் தீர்க்குமன்றோ
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயோ (1)
(உனக்காக நான்...)
ஐந்து சகோதரர் அழிகிறாரே
யாரையாவது அனுப்பிடுமே
யாரை நானும் அனுப்பிடுவேன்
யார் தான் போவார் எனக்காக (1)
(உனக்காக நான்...)