Home
84

எத்தனை திரள் என்

          எத்தனை திரள் என் பாவம் என் தேவனே 
எளியன் மேல் இரங்கய்யனே (2) 
நித்தம் என் இருதயம் தீயதென் பரனே 
நிலைவரம் எனில் இல்லை நீ என் தாபரமே 

(எத்தனை திரள்...)

பந்தம் உன்மேல் எனக்கில்லை என்பேனே 
பணிந்திடல் ஒழிவேனோ (2) 
சுத்தமுறுங் கரம்கால்கள் விலாவினில் 
தோன்றுது காயங்கள் தூய சிநேகா 

(எத்தனை திரள்...)

ஏன்றன் அநீதிகள் என் கண்கள் முன்னமே 
இடைவிடாதிருக்கையிலே (2) 
உன்றன் மிகுங் கிருபை ஓ மிகப் பெரிதே 
உத்தம மனமுடையோய் எனை ஆளும் 

(எத்தனை திரள்...)

ஆயங்கொள்வோன்போல் பாவ ஸ்திரிபோல் 
அருகிலிருந்த கள்ளன்போல் (2) 
நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன் 
நீ எனக்காகவே மரித்தனை பரனே 

(எத்தனை திரள்...)

கெட்ட மகன்போல் துஷ்டனாய் அலைந்தேன் 
கெடு பஞ்சத்தால் நலிந்தேன் (2) 
இஷ்டமாய் மகன் என பாத்திரன் அல நான் 
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தம் அப்பனே

(எத்தனை திரள்...)
        

Listen to the Song

Song 84
0:00 / 0:00
Speed:

Share this Song