86
உம்மை ஆராதிக்க உம்
உம்மை ஆராதிக்க உம் ஆலயத்தில்
நாம் காத்திருந்தோம் பல காலங்களாய் (2)
உம்மை ஆராதிக்க…
சத்திய வேதத்தைச் சாற்றிடுவோம்
சாட்சிகளாய் என்றும் ஜீவித்திட (2)
சத்துருவை என்றும் ஜெயித்திடுவோம்
சித்திகளாய் அவர் ஆலயத்தில் (2)
(உம்மை ஆராதிக்க...)
வருகையின் நாட்கள் சமீபமல்லோ
வந்திடுவார் அவர் ஆலயத்தில் (2)
ஆயத்தமாக இருப்பவர்க்கும்
ஆறுதல் கூறிடும் அண்ணல் அவர் (2)
(உம்மை ஆராதிக்க...)
நன்றிகள் கூறியே வாழ்த்திடுவோம்
நலமுடன் யாவரும் வாழ்ந்திடவே (2)
நம் மீட்பர் இயேசு இரட்சகராய்
நம்மையும் அங்கே சேர்த்திடுவார் (2)
(உம்மை ஆராதிக்க...)