Home
88

அற்புதர் அற்புதர் அற்புதர்

          அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
இயேசு அற்புதர் (4)

எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் (2)

(அற்புதர் அற்புதர்...)

எத்தனை துன்பங்கள் நம்மில் வந்த போது
தீர்த்த இயேசு அற்புதர்
என்னென்ன தொல்லைகள் நம்மில் சூழ்ந்த போது
காத்த இயேசு அற்புதர் (4)
உலகத்தில் இருப்போனிலும் எங்கள் இயேசு
பெரியவர் அற்புதரே (2)
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே

(எல்லோரும் பாடுங்கள்...)

அலைகடல் மேலே நடந்தவர் எங்கள்
இயே அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர் (4)
அறைந்தனர் சிலுவையிலே ஆண்டவர்
மரித்தார் அன் நாளினிலே (2)
ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த எம்
இயேசு அற்புதரே

(எல்லோரும் பாடுங்கள்...)
        

Listen to the Song

Song 88
0:00 / 0:00
Speed:

Share this Song