Home
89

என்னை மறவா இயேசு

          என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

(என்னை மறவா இயேசு...)

வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் (2)
ஆபத்திலே அருந்துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே (2)

(என்னை மறவா இயேசு...)

பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் (2)
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவரு மென்னை (2)

(என்னை மறவா இயேசு...)

திக்கற்றோராய்க் கை விடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் (2)
நீ அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே (2)

(என்னை மறவா இயேசு...)

உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம் (2)
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக் கொடியே

(என்னை மறவா இயேசு...)
        

Listen to the Song

Song 89
0:00 / 0:00
Speed:

Share this Song