Home
9

எந்தக் காலத்திலும் எந்த

          எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன் (2)

ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே
தாய் தந்தை நீரே - தாதியும் நீரே
தாபரம் நீரே -என் தாரகம் நீரே

(எந்தக் காலத்திலும் எந்த...)

வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே
வானிலும் நீரே – பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே

(எந்தக் காலத்திலும் எந்த...)

துன்ப நேரத்தில் -இன்பமும் நீரே
இன்னல் வேளையில் - மாறாதவர் நீரே
தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
ராஐ ராஜனும் - என் சர்வமும் நீரே

(எந்தக் காலத்திலும் எந்த...)
        

Listen to the Song

Song 9
0:00 / 0:00
Speed:

Share this Song