90
அன்பு இல்லா உலகிலே
அன்பு இல்லா உலகிலே நம்பி வந்தேன் இயேசுவே (2) அலைகள் நிறைந்த வாழ்விலே அமைதி நீரே இயேசுவே (2) (அன்பு இல்லா உலகிலே...) உலக மேன்மைகள் - அவை மறையும் மேகங்கள் (2) உந்தன் ஞானங்கள் அவை கிருபை வசனங்கள் (1) (அன்பு இல்லா உலகிலே ...) உலக பாசங்கள் - வெறும் வெளியின் வேசங்கள் (2) உந்தன் நேசங்கள் அவை பரத்தின் ஈவுகள் (1) (அன்பு இல்லா உலகிலே...)