93
இருள் சூழும் காலம்
இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடும் முன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார்
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்
எத்தனை நாடுகள் இந்நாட்களில்
கர்த்தரின் பணிக்குத் தான் கதவடைத்தார்
திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள்
(திறவுண்ட வாசல்...)
விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒரு மனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்
(திறவுண்ட வாசல்...)
இனிவரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆகிடுமே
(திறவுண்ட வாசல்...)
இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பென்னும் ஆவியால் நிறைத்திடுமே
இலங்கையின் எல்லாத் தெருக்களிலும்
இயேசுவின் நாமமும் விரைந்திடுமே
(திறவுண்ட வாசல்...)